கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 'எறிபத்த நாயனார் யானையை துணித்த விழா கோலாகலம்' - பக்தர்கள் பரவசம்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பூக்குடலை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 64-நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார்,
இறைவனுக்காக வைத்திருந்த பூக்களை சோழ மன்னனின் பட்டது யானை தட்டிவிட்டதால் கோபம் அடைந்த அவர், கோடாரியால் யானையின் தும்பிக்கையை துண்டித்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
இந்த ஆன்மீக வரலாற்று நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.