"வேலை நேரத்தை 6 மணி நேரமாக்க முயன்றவர் கருணாநிதி" - 12 மணி நேர வேலை மசோதா - மநீம சாடல்
12 மணி நேர வேலைக்கு வழிவகுக்கும் மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 மணி நேர வேலை மசோதா தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.