கர்நாடகா: தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Update: 2023-02-28 02:52 GMT
  • கர்நாடாகவின் ஷிவமோகாவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தின் பயணிகள் அரங்கம் தாமரை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 300 பயணிகள் வரை இதை பயன்படுத்த முடியும்.
  • கர்நாடகாவில் இரண்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • தொள்ளாயிரத்து 90 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் ஷிவமோகா, ஷிக்கரிபுரா, ரானேபென்னூர் ரயில் பாதை, மலந்த் பகுதியை பெங்களூரு மும்பை ரயில் பாதையுடன் இணைக்கும்.
  • 100 கோடி ரூபாய் செலவில் ஷிவமோகாவில், கோட்டேங்காரு ரயில் பெட்டி பணி மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • இதன் மூலம் மைசூரு மற்றும் பெங்களூரு பணி மனைகளில் நெரிசல் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 215 கோடி ரூபாய் செலவில், பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களையும் தொடங்கிவைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்