காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியிடம்.. ஆனால் வேலை செய்வது வேறு இடம்... பட்டியல் வெளியாகி அதிர்ச்சி-ஆட்சியர் அதிரடி

Update: 2022-09-10 08:27 GMT

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியிடம் பெற்று புதுச்சேரியில் பணிபுரியும் ஊழியர்கள்".43 பேரின் சம்பளத்தை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பரிந்துரை.

காரைக்கால் மருத்துவமனையில் பணி நியமனம் பெற்ற 3 சிறப்பு மருத்துவர்கள்.2 மகப்பேறு மருத்துவர்கள், 2 உதவியாளர்கள், 33 தலைமை செவிலியர்கள்.

மொத்தம் 43 பேர் மாற்று பணி என்று கூறி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவது கண்டுபிடிப்பு.சிறுவன் மரணத்தை தொடர்ந்து, காரைக்கால் அரசு மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. புகார் குறித்து விசாரித்த போது 43 பேரின் பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

"43 பேரும் உடனடியாக காரைக்கால் மருத்துவமனையில் பணிக்கு சேர வேண்டும்"

"தவறும் பட்சத்தில் மாத சம்பளத்தை விடுவிக்க கூடாது"மாவட்ட கருவூல அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பரிந்துரை.புதுச்சேரி மருத்துவ ஊழியர்களுக்கு எச்சரிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்