குடிநீர் குழாயில் ஏற்பட்ட தகராறு.. குழந்தைகளின் முன்னே தாய் மீது தாக்குதல் -இணையத்தில் பரவும் வீடியோ
- கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட தகராறின் முன்விரோதத்தால், குழந்தைகளின் கண்முன்னே தாயாரை ஒரு குடும்பமே கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- மணவாளக்குறிச்சி அருகே கல்படி பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி மஞ்சுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்வரிக்கும் தெருவில் குடிநீர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- இதனால், விரக்தி அடைந்த மகேஷ்வரி, தனது குடும்பத்தினருடன் சென்று, மஞ்சு வீட்டிற்குள் புகுந்து அவரது கணவர் ரவியை கம்பியால் தாக்கியுள்ளனர்.
- பின்னர் மஞ்சுவை சுற்றி வளைத்து அவரது குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக தாக்கி உள்ளனர்.