மயக்கநிலையில் பெண் பாலியல் பலாத்காரம் - ஒன்றும் அறியாதது போல் நடித்த இளைஞர் - வெளிச்சத்துக்கு வந்த உண்மை
- கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கி இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் 47 வயதான பெண்.
- இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த எட்வின் என்ற இளைஞர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- இதனால், ஆத்திரமடைந்த அவர், இது குறித்து எட்வினின் பெற்றோரிடம் பலமுறை கூறி கண்டித்துள்ளார்
- . இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் எட்வின் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த போது, பெண்ணை சரமாரியாக தாக்கிய எட்வின், அவரை மயக்க நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதையடுத்து, பெண்ணை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிசிச்சை பலனின்றி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவத்தில் ஒன்றும் அறியாது போல் உறவினர்களுடன் சேர்ந்து பெண்ணுடன் மருத்துவமனையில் இருந்த எட்வினை, தீவிர விசாரணைக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.