கண்ணகி கோயில் கேரள எல்லைக்குள் உள்ளது....தேனி எம்.பி. ரவீந்திரநாத் சர்ச்சை பேச்சு

Update: 2022-12-16 11:52 GMT

தமிழகத்திற்கு சொந்தமான கண்ணகி கோயில், கேரள எல்லைக்குள் இருப்பதாக, தேனி எம்.பி ரவீந்திரநாத் நாடளுமன்றத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக-கேரள எல்லையான வண்ணாத்திப்பாறை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பழமையான மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. கண்ணகி கோயில் தமிழகத்தில் அமைந்துள்ள போதிலும், இதற்கு செல்லும் வழி கேரளப் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று தமிழக மற்றும் கேரள மக்கள் கேரளப் பகுதி வழியாக சென்று கோயிலில் வழிபாடு நடத்துவார்கள். இந்நிலையில், நாடளுமன்றத்தில் கண்ணகி கோயில் வழிபாடு தொடர்பாக பேசிய தேனி எம்.பி ரவீந்திரநாத், கண்ணகி கோயில் முதலில் தமிழகத்தில் தான் இருந்தது என்றும், ஆனால் அது தற்போது கேரள எல்லைக்குள் வருவதாகவும் பேசினார். ரவீந்திரநாத்தின் இந்தக் கருத்து, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்