- 2024 மத்தியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் எந்த கூட்டணியில் யார் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் கமல்ஹாசன் நகர்வும் அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
- இந்திய சினிமாவை உலகுக்கும் வெளிச்சம் போட்டு காட்டிய கமல்ஹாசன், 2018-ல் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி யை தொடங்கி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிட்டார். அப்போது கட்சி 3.78 சதவீத வாக்கை பெற்றது. ஆனால் 2021 தேர்தலில் 154 இடங்களில் போட்டியிட்ட கட்சியின் வாக்கு வங்கி 2.62 சதவீதமாக சரிந்தது.
- இந்த நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியை கமல்ஹாசன் நெருங்குவதாக கூறப்பட்டது. அந்தவகையில் டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அவர் இடம்பெற்றதும் பேசுபொரு ளாகியது.
- கமல்ஹாசனுக்கு சென்னையில் ஒரு தொகுதி வழங்கப்படலாம், மாநிலங்களவையில் ஒரு எம்.பி. பதவி வழங்கப்படலாம், அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யலாம்
- என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் பேசப்பட்டது.
- இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து ஈவிகேஎஸ் இளங்கோவனு க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா? என்ற கேள்வியை வலுக்கச் செய்தது.
- இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின் சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் என வெகுவாக பாராட்டி எழுதினார்.
- அப்போது செய்தியாளர்களின் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், இப்போதே கிளைமாக்ஸை சொல்லக்கூடாது என ட்விஸ்டாக பதிலளித்திருக்கிறார்.