தண்ணீரை பார்த்ததும் ஒரே ஜாலி தான்..! ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய குளியல் தொட்டி - குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்த கல்யாணி யானை

Update: 2023-02-08 05:20 GMT

கோவை மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோவிலில், புதிய குளியல் தொட்டியில் கல்யாணி யானை குளித்து மகிழ்ந்தது. பேரூர் அங்காளம்மன் கோவில் அருகில், 60 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த தொட்டியில், யானை செல்வதற்கு சாய்வு தளமும், நிழற் குடையும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்