கள்ளக்குறிச்சி இளைஞர் தற்கொலை விவகாரம்.. தற்கொலைக்கு முன்.. இளைஞர் பேசிய ஆடியோ வைரல்
- கள்ளக்குறிச்சி அருகே இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு முன்பாக இளைஞர் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- சின்னசேலம் அடுத்துள்ள தகரை வடக்கு கொட்டாயை சேர்ந்தவர் தினேஷ்.
- இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
- இதில், யுவராஜின் தரப்பினர் தினேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- இதனால், மன உளைச்சலில் இருந்த தினேஷ், அருகில் உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தினேஷ் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து பேசிய ஆடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.