2 பிள்ளைகளுடன் பெண் விபரீத முடிவு.. சரியான நேரத்தில் வந்த போலீஸ் - சினிமா பாணியில் நடந்த நிஜ சம்பவம்
ஜெயங்கொண்டம் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன் - சுதா தம்பதி. இந்நிலையில் கணவர் வேல்முருகனுக்கும் - சுதா விற்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் சுதா அணைக்கரை ராஜ வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்யும் எண்ணத்தில் நின்றுள்ளார். அப்போது ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுதாவை தடுத்து நிறுத்தினர். மேலும் கணவரை வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.