ஜல்லிக்கட்டு தீர்ப்பு - திருமாவளவனை விமர்சித்த அண்ணாமலை

Update: 2023-05-18 10:36 GMT

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க காரணமான பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்... ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவுமியா ரெட்டியும் ஒருவர் என்றும், சவுமியா ரெட்டிக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்ததை நினைவு படுத்துவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்த அவர், ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் பிரதமர் மோடி மட்டும் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்