800 காளைகள்.. 400 வீரர்கள்.. கரூர் ஆர்.டி.மலையில் இன்று ஜல்லிக்கட்டு
கரூர் மாவட்டம் ஆர்.டி.மலையில்
இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. விராச்சிலேஸ்வரர் மற்றும் பிடாரி அம்மன் கோயில் அருகே நடைபெற உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் பங்கேற்க 800 மாடுகளுக்கும், 400 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம், வருவாய் அலுவலர் லியாகத் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.