வங்கியில் நகை அடகு வைப்பதில் முறைகேடு... பாஜக-மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல்

Update: 2023-02-07 00:04 GMT

கேரள மாநிலம் பத்தனந்திட்டா அருகே பாஜக போராட்டத்தின் போது பாஜக மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

பந்தளம் பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளில் முறைகேடு என கூறி, கம்யூனிஸ்ட் நிர்வாகக் குழுவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, வங்கி நிர்வாக குழுவுக்கு ஆதரவாக திரண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் வங்கிக்குள் நுழைய முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்