உயிருக்கு உலை வைக்கும் ஹோட்டல்கள் - உணவில் கிடந்த பூரான்..! - அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்

Update: 2022-10-27 12:20 GMT

மதுரவாயல் அருகே ஓட்டலில் உணவு ஆர்டர் செய்தவருக்கு அதில் பூரான் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் பிரபல தனியார் உணவகத்தில் கடந்த 23ஆம் தேதி ஒருவர் தன் குடும்பத்தினருடன் சாப்பிட வந்துள்ளார்.

அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவில் பூரான் ஒன்று கிடக்கவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் அவர்கள் புகார் அளித்ததோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் இதுகுறித்து காவல்துறையில் யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் உணவில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்