உலகின் சிறந்த பயிற்சியாளர்களாக இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி பயிற்சியாளர்கள் தேர்வு

Update: 2022-10-07 02:20 GMT

உலகின் சிறந்த ஹாக்கி பயிற்சியாளர்களாக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ரசிகர்கள் வாக்கெடுப்பின் மூலம் சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களை ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. இந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி அணியின் சிறந்த பயிற்சியாளராக 31 புள்ளி 4 சதவீத வாக்குகளுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்டு தேர்வாகி உள்ளார். இதேபோல் மகளிர் ஹாக்கியின் சிறந்த பயிற்சியாளராக இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஜனெக் ஸ்காப்மேன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்