இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவ போர் பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. எல்லையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவ போர் பயிற்சி, அடுத்த மாதம் முதல் வாரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பயிற்சியில் அமெரிக்க விமானப்படையினர், இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் படையினரும் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ராணுவ போர் பயிற்சி மூலம் இருநாட்டு வீரர்களும் தங்களுடைய அனுபவங்கள் மற்றும் திறன்களை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.