ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது - பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணம் | G20 Summit

Update: 2022-11-14 07:27 GMT

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று, இந்தோனேஷியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தோனேஷியாவில், பாலி நகரில் ஜி20 உச்சி மாநாடானது நவம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. இதனடிப்படையில் இந்த ஜி20 மாநாடு இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். "ஒன்றிணைந்து மீள்வோம், வலிமையோடு மீள்வோம்" என்னும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது உலக தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி உரையாடவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், விவசாயம் உள்ளிட்டவைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்