"புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு" - சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமனு

Update: 2022-12-27 15:40 GMT

புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமனு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், புதுச்சேரியில் தற்போது 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், போதிய கொரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும், 145 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்