திருச்செந்தூர் கோயிலில் இதற்கு தடை"கோயில்கள் என்ன சத்திரமா?" உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

Update: 2022-11-10 03:50 GMT


திருச்செந்தூர் முருகன் கோயிலின் சிலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு , செல்போன் புகைப்படம் எடுப்பதை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என கோயில் அர்ச்சகர் சீதாராமன் தொடுத்திருந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, தமிநாட்டில் உள்ள கோயில்களில் மட்டும் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதாகவும், அது மாற்றப்பட வேண்டும் என்றும் கருத்து கூறினர்.

கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கும் அர்ச்சகர்கள் அதனை அவரவருடைய யூடியூப் சேனலில் பதிவிடுவதை கண்டித் ததோடு, கோயில்கள் என்ன சத்திரமா? என கேள்வி எழுப்பினர்.

திருப்பதி கோயிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழகத்தில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

கோயில்கள் ஒன்றும் சுற்றுலா தளங்கள் அல்ல என குறிப் பிட்ட நீதிபதிகள், கோயிலுக்கு வருபவர்கள் அநாகரிகமாக

டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்குமாறும் இந்து அறநிலையத்துறை ஆணை யருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,

கோயிலின் வாசலிலேயே சோதனை மையம் அமைத்து, செல்போன் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்த பின்னரே கோயிலுக்குள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்றும்

கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது மற்றும் செல்பி எடுப்பதை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை ஆணையர் அனுப்ப வேண்டும் என்றும்

அந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப் பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்