இம்ரான் கான் கைது - கட்சியினர் எடுத்த அதிரடி முடிவு | Pakistan | Imran Khan
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது பிடிஐ கட்சி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது...இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, குஜ்ரன்வாலா, பைசலாபாத், முல்தான், பெஷாவர் மற்றும் மர்தான் உட்பட பாகிஸ்தான் முழுவதும் உள்ள பல நகரங்களில் PTI கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,
இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், இம்ரான் கான் கைதைக் கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாசிசத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுமாறு மக்களை அக்கட்சி அழைத்துள்ளது.