"ரூ. 5 கோடி கொடுத்தால் இரு.. இல்லைனா"... வரதட்சணை கேட்டு கணவர் கொடுத்த ஷாக் - வீட்டு வாசலில் மனம் நொந்து நின்ற பெண்
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல ஜவுளிக்கடை அதிபரின் மகள் சுப ராகா.
இவருக்கும், சேலத்தை சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை அதிபரின் மகனான கார்த்திக் பாலாஜிக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில், சுப ராகாவை அவரது கணவரின் குடும்பத்தினர் 5 கோடி ரூபாய் கேட்டு சித்ரவதை படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், சுப ராகா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே, நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு கார்த்திக் பாலாஜி விண்ணப்பித்த நிலையில், அதிர்ச்சியடைந்த சுப ராகா வழக்கின் விசாரணை முடியும் வரை தன்னை தனது கணவரின் வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பெற்றோருடன் சேலம் வந்த சுப ராகா, வீட்டினுள் நுழைய முயன்ற போது அவரது கணவர் குடும்பத்தினர் தடுத்ததால் தகராறு ஏற்பட்டது.
இதில், நீதிமன்றத்தின் உத்தரவு நகலை காண்பித்த அவர், கணவரின் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.