"அமுல் கால் வைத்தால் ஆவினுக்கு அடி "தமிழகத்துக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி - என்ன செய்ய போகிறது அரசு?
தமிழகத்தில் அமுல் பால் கொள்முதல் செய்வதை விவசாயிகள் ஆதரிப்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்ய தொடங்கியிருக்கும் குஜராதின் அமுல் நிறுவனம், 30 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும், உடனடியாக தடுக்குமாறு அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
மறுபுறம் ஆவினுக்கு எதிராக செயல்படவில்லை என விளக்கம் அளித்திருக்கிறது அமுல்...
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஒரு கோடி லிட்டர் பாலில் 36 லட்சம் லிட்டரை மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது, மீத பாலை தனியாரே கொள்முதல் செய்கிறார்கள் என்கிறது அமுல்...
ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயி, அமுலுக்கு பால் வழங்க வேண்டும் என்றால் ஆவினிடம் இருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் பெற்றுவர வேண்டும் எனவும் சொல்கிறது அமுல்..
கூடுதல் தொகைக்கு அமுல் பாலை வாங்குகிறது என்ற தகவலையும் அமுல் மறுக்கிறது.
இந்த சூழலில் அமுலுக்கு பால் வழங்க ஆர்வம் கொண்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.