"நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு அள்ளி அள்ளி வட்டி தாரேன்"... மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவனம்

Update: 2023-02-18 15:18 GMT

அதிக வட்டி தருவதாக கூறி 56 கோடியே 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தை சேர்ந்த 10 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காட்பாடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு தொகைக்கு 25 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியுள்ளது. ஆனால் செலுத்திய முதலீட்டுக்கு வட்டி தராமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. 200 முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 56 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் இயக்குனர் மோகன்பாபு, நிர்வாகிகள் சரவணகுமார், குப்புராஜ், ஜெகனநாதன் உள்ளிட்ட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் 3 பேர் மட்டுமே ஆஜரானதால், எஞ்சிய 10 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்