காஞ்சிபுரம் அருகே வேலைக்கு சென்றதை கணவன் கண்டித்ததால், மனைவி 3 வயது குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தின் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர், சில நாட்களுக்கு முன் நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா, தனது 3 வயது குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.