10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாதவர்கள் எத்தனை பேர்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி

Update: 2023-04-07 04:05 GMT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின், முதல் நாள் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் எழுதவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது . இது சர்ச்சையானதால் அடுத்தடுத்த நாட்களில் தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை தேர்வுத் துறை வெளியிடவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், முதல் நாளில், ஒன்பது லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றதாகவும், முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்