"தமிழக மீனவர்களை மீட்க எவ்வளவு நாள்கள் ஆகும்?" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Update: 2022-09-30 06:54 GMT

இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ், இந்த ரிட் மனு தெளிவாக இல்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க கூடுதல் அவகாசம் தேவை என வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சி.ஆர். ஜெய சுகின், மீனவர்கள் இன்னும் மீட்கபடாமல் இருப்பது கவலையளிக்கிறது என வாதிட்டார்.

இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க எவ்வளவு நாள்கள் ஆகும்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்