சென்னையில் நடந்த கோர விபத்து.. கோயில் முன்னே இளைஞருக்கு நேர்ந்த சோகம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை திருவொற்றியூரில், மாநகர பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே மின்னணு பொருட்கள் விற்பனை கடையில் பணியாற்றி வந்த ரகு என்பவர், கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். நெடுஞ்சாலை எல்லையம்மன் கோயில் வழியாக வந்த போது, மாநகர பேருந்து மீது மோதி, கீழே விழுந்தார். பின்னர், பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்ட ரகுவை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.