காதலித்ததால் செல்ல மகளை.. கொடூரமாக கொன்ற குடும்பம்.. மும்பையில் பரபரப்பு

Update: 2023-01-28 09:19 GMT

காதலித்ததால் இளம்பெண்ணை ஆணவ கொலை செய்த சம்பவத்தில் தந்தை, சகோதரர் உட்பட 5 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அருகே பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் இளம்பெண்ணின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் சுபாங்கி ஜோக்தத் என்பதும், அவரை கொலை செய்து எரித்து இருப்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில், ஹோமியோபதி மருத்துவ மாணவியான சுபாங்கிக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் ஏற்பாடு செய்ததும், சுபாங்கி வேறொருவரை காதலிப்பதாக கூறியதால் திருமணம் நின்றதும் தெரிய வந்தது.

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சுபாங்கியை கழுத்தை நெறித்து கொன்றதுடன், உடலை எரித்து ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தந்தை, மகன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்