கோர்ட் வளாகத்தில் சுற்றிய போலி வக்கீல்... ஒரே உருட்டில் பணத்தை சுருட்டும் நபர்கள்... கொஞ்சம் உஷார் மக்களே...!

Update: 2023-03-01 02:39 GMT
  • தேனியில், வழக்கறிஞர் போல் நடித்து பணத்தை வாங்கி ஏமாற்றிய நபரை, வழக்கறிஞர்கள் சங்க பார் கவுன்சில் புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • தேனி மாவட்டம் தேனி அரண்மனை புதூரை சேர்ந்த துர்க்கை அம்மாள் என்பவர், பூர்வீக சொத்தை தனது தந்தை மறைமுகமாக வேறோரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர வந்துள்ளார்.
  • அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த சக்திவேல் என்பவர், தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி அவரிடம் அறிமுகமாகியுள்ளார்.
  • வழக்குப்பதிவு செய்ய இரு தவணைகளாக மொத்தம் 28 ஆயிரம் பணத்தை, துர்க்கை அம்மாளிடம் இருந்து சக்திவேல் பெற்றுள்ளார்.
  • ஆனால், கூறியபடி வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்ததால், அதிருப்தி அடைந்த துர்க்கையம்மாள், கொடுத்த பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
  • அப்போது, சக்திவேல் துர்க்கையம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
  • இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட துர்க்கை அம்மாள், தேனி வழக்கறிஞர்கள் சங்க பார் கவுன்சிலில், இதுகுறித்து தெரிவித்த நிலையில், சக்திவேல் வழக்கறிஞரே இல்லை என தெரியவந்தது.
  • அதனைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் போலி வழக்கறிஞர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்