அமைச்சருக்கு சர்ஜரி செய்தவர் தான்.. யார் இந்த மருத்துவர் ஏ.ஆர். ரகுராம்..? பின்னணி என்ன..?

Update: 2023-06-22 02:54 GMT

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட இந்தியாவின் சிறந்த கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர். ரகுராம் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு மருத்துவர் ஏ. ஆர். ரகுராம் தலைமையிலான மருத்துவக்குழு அறுவை சிகிச்சையை செய்திருக்கிறது. தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை செய்திருக்கும் மருத்துவர் ஏ. ஆர். ரகுராம் இந்தியாவின் சிறந்த கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர்...

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர் ரகுராம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். 1979-ம் ஆண்டு காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்தவர். 1991-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் MCH, கார்டியோ தொராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவைச் சிகிச்சை படிப்பை முடித்தவர்.

இந்தியாவின் சிறந்த கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான ரகுராம், இதய மருத்துவ துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. பிரிட்டனில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்ற தகுதியாக கருதப்படும் FRCS-யை முடித்திருக்கிறார்.

இதய பிரச்சினையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும், அறுவை சிகிச்சை செய்யப்படுவது எப்போது...? அறுவை சிகிச்சைக்கு பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எல்லோரும் புரியும் வகையில் விளக்குபவர்.

ஏ.ஆர். ரகுராம், இதய சிகிச்சை நிபுணர்

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மருத்துவமனைகளிலும், இந்தியாவில் அப்பல்லோ, சிம்ஸ் மருத்துவமனைகளிலும் பணியாற்றியவர் மருத்துவர் ரகுராம்... சிக்கலான சிகிச்சைகளையும் அனுபவத்தில் சிறப்பாக செய்தவராக விளங்கும் மருத்துவ ஏ.ஆர். ரகுராம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் மதிப்புமிக்க மருத்துவரும் கூட...

Tags:    

மேலும் செய்திகள்