மத்திய ஜிஎஸ்டி வரி இணை ஆணையர் வீட்டில் சோதனை.. கட்டு கட்டாக சிக்கிய பணம், நகை குஜராத்தில் பரபரப்பு
குஜராத்தின் காந்திதாமில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை ஆணையர் வீட்டில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 42 லட்ச ரூபாய் பணம், வெளிநாட்டு கரன்சிகள், நகை மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகேஷ் சவுத்ரி வருமானத்திற்கு அதிகமாக 74 சதவிகிதம், சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகேஷ் சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.