50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில், ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் இறக்குமதி மருந்துக்கும், அரிய வகை நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்து பொருள்களுக்கும், சில குறிப்பிட்ட மருந்து தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் உணவு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது இவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது தவிர, திரையரங்குகளில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 05 சதவீதம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.