நடுரோட்டில் நிறுத்தி அடித்து கொண்ட அரசு - தனியார் பஸ் கண்டக்டர்கள்.. பரபரப்பு காட்சிகள்

Update: 2022-11-29 06:24 GMT

சேலத்தில் அரசு பேருந்து நடத்துநருக்கும், தனியார் பேருந்து நடத்தநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராசி புரத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே நேரத்தில் வந்த தனியார் பேருந்து நடத்துநருக்கும், அரசு பேருந்து நடத்துநருக்கும் பேருந்தை இயக்கும் நேரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தை சாலையில் நிறுத்திய இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தியதை அடுத்து. இரு பேருந்துகளும் புறப்பட்டு சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்