"காலநிலை மாற்றத்தால் உலகம் சவால்களை எதிர்கொள்கிறது" C20 மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Update: 2023-05-28 01:38 GMT

மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடக்கும் சர்வதேச சி 20 மாநாட்டினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்கும் G 20 மாநாடு அடுத்த மாதம் 20, 21, 22 ஆகிய 3 நாள் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக சி20 என்ற பெயரில், 'சர்வதேச c 20 மாநாடு' தொடங்கியது. இந்த மாநாட்டை, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை வெளியிட்டு, அனைவருக்கும் வழங்கினார். மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "வசுதேவ குடும்பகம் நமது இந்தியாவின் ஆன்மீக அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் உலகம் பல சவால்களை கொண்டு வருவதாகவும், இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்