மேலைநாட்டு சிந்தனை மற்றும் தாக்கத்தாலும் கல்வி முறையாலும் நாம் நமது பாரம்பரியத்தை மறந்து வருகிறோம் என்று தமிழக ஆளுநர் ரவி கூறினார்.
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமியுடன் சத்கார் பூங்காவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நமது ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் மிகுந்த மன அழுத்தத்தில் பணியாற்றி வருகின்றனர் என்றும், அதிலிருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதில் மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டுகிறது என்றும் கூறினார். மேலைநாட்டு சிந்தனை மற்றும் தாக்கத்தால், கல்விமுறையால் நாம் நமது பாரம்பரியத்தை மறந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்