சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 368 ரூபாய் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவுக்கு 42 ஆயிரத்து 368 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் டிசம்பரில் 6.5 சதவீதமாக, கடந்த 14 மாதங்களில் மிகக் குறைந்த அளவுக்கு சரிந்துள்ளதும், டாலர் மதிப்பு சரிந்துள்ளதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை இனி வெகுவாக அதிகரிக்காது என்பதால், சர்வதேச முதலீடுகள் அமெரிக்க கடன் பத்திரங்களில் இருந்து டாலருக்கு மாறி வருகின்றன.