"நீங்க ரியல் ஹீரோ சார்..!" நீலிமலை முதல் சன்னிதானம் வரை... மாற்றுத்திறனாளியை முதுகில் சுமந்து சென்ற மனிதநேய காவலர்

Update: 2022-12-03 09:41 GMT

மாற்றுத் திறனாளி ஒருவரை சபரிமலை சன்னிதானம் வரை கோயில் காவலர் தனது முதுகில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலை ஏற சிரமப்படும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்காக டோலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதும், கட்டணமாக 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதால், ஆந்திராவைச் சேர்ந்த அல்லிராஜ் என்ற மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தர் வறுமையின் காரணமாக சிரமத்திற்காளானார். இந்நிலையில் அங்கு கோயில் காவலராக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குமார், அவதிக்குள்ளான அல்லிராஜைத் தூக்கி தனது தோளில் சுமந்து சென்று நீலிமலை, கழுதை ஏற்றம் என மிகவும் கஷ்டமான பகுதிகளை எல்லாம் கடந்து சன்னிதானம் வரை கொண்டுபோய் சேர்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்