பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் டேனியல் ஆல்ட்மெயர் உடன் சின்னர் மோதினார். இதில் 6க்கு 7, 7க்கு 6, 1க்கு 6, 7க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் ஆல்ட்மெயர் வெற்றி பெற்றார். போராடி தோல்வி அடைந்த சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.