"தம்பி" சிலையை பார்த்ததும் ஜாலியாகும் வெளிநாட்டு வீரர்கள் - "செல்பி எடுத்துட்டு தான் போவோம்"
செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை வீரர்கள், 6வது நாளாக சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று தொடங்கவுள்ளது. இந்தநிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் 6 வது நாளாக இன்றும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை மெக்சிகோ, கானா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் சங்கப் பிரதிநிதிகள், பயிற்சியாளர்கள், வீரர்கள் என 221 பேர் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் காவல்துறை பாதுகாப்புடன் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தம்பி சின்னத்தின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.