"டொனெட்ஸ்க்-ல் இருந்து மக்கள் கட்டாய வெளியேற்றம்!" - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

Update: 2022-07-31 12:44 GMT

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து பொதுமக்கள் கட்டாயம் வெளியேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதன் மூலம், ரஷ்ய தாக்குதல்களில் இருந்து அப்பிராந்திய மக்கள் தப்ப முடியும் என்றும், வெளியேறிய மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்... துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், குளிர்காலம் தொடங்கும் முன் வெளியேற்றம் நடத்தப்படும் என்றார். பெரும்பாலான மக்கள் வெளியேற விரும்பாவிட்டாலும், இது மிகவும் தேவையான ஒன்று என ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்