125 பேரின் உயிரை குடித்த கால்பந்து மைதானம் - 2 அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை
125 பேரின் உயிரை குடித்த கால்பந்து மைதானம் - 2 அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை
இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் பலியான நிலையில், சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பிற்கு இந்திய மதிப்பில் 13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலாங் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் அரேமா எஃப்சி அணி மற்றும் பெர்சபயா அணிகளுக்கு இடையேயான மோதலில் அரேமா அணி தோல்வியடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசிய நிலையில், நுழைவாயில் நோக்கி ஓடிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் பலியானதுடன், மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவின் கால்பந்து கூட்டமைப்பு அரேமா எஃப்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை விதித்ததுடன், அந்த கிளப்பிற்கு 13 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.