திண்டிவனத்தில் பரபரப்பு திடீரென தீப்பற்றி எரிந்த கூரை வீடு

Update: 2022-10-24 16:18 GMT

திண்டிவனத்தில் கூரை வீடு தீப்பற்றி எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டிவனம் ஒத்தவாடு தெருவில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில், ராக்கெட் விழுந்து கூரையில் தீ பிடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்