திமுக - அதிமுகவினர் இடையே மோதல்.. களத்தில் இறங்கிய பொதுமக்கள் - சேலத்தில் பரபரப்பு
- சேலம் பள்ளப்பட்டி விநாயகர், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருவிழாவுக்காக கடைகள் அமைக்கும் விவகாரத்தில், திமுக, அதிமுகவினரிடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கோயில் திருவிழாவை ஒரே நாளில் நடத்தி முடிக்க போலீசார் அறிவுறுத்தினர்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், சேலம் மூன்று ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடையவே, தாசில்தார் அருள் பிரகாஷ் பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இதில் கோயிலை சுற்றி கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்படாது என்ற நிபந்தனையுடன், திருவிழாவை முழுமையாக கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.