தகர்ந்த கனவால் கண்ணீர்விட்டு அழுத நெய்மர்... பிஞ்சு கைகள் செய்த மாயம்... உலகின் கவனம் ஈர்த்த குரேஷிய வீரரின் மகன்
பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் நட்சத்திர வீரர் நெய்மர் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார். அவரை சக வீரர்கள் தேற்ற முயன்ற நிலையில், நெய்மர் தேம்பி தேம்பி அழுதார். மைதானத்தைவிட்டு கண்ணீர் சிந்தியபடி நெய்மர் வெளியேறியது, ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மைதானத்தில் கண்ணீர் சிந்திய பிரேசில் வீரர் நெய்மருக்கு குரோஷியா வீரர் இவான் பெரிஸிக்கின் மகன் லியோ ஆறுதல் கூறியது, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்மரை நோக்கி ஓடிவந்த சிறுவன் லியோவை பாதுகாப்பு அதிகாரிகள் சில வினாடிகள் நிறுத்தினர். தொடர்ந்து சிறுவன் லியோவை நெய்மர் ஆரத்தழுவிய நிலையில், இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.