திருவொற்றியூர் அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை தெரிந்து கொண்ட சிறுமியின் தந்தை, தன் மகள் என்று கூட பார்க்காமல் அவளை மிரட்டி, அவளுக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் வயிறு பெரிதாவதை கண்ட சிறுமியின் தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார்.
இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்ததை உறுதி செய்தனர்.
பின்னர் சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.