திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த இளவரசன் மீது கொலை வழக்கு உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இளவரசன் தனது நண்பர்கள் நான்கு பேருடன் கடந்த 12ஆம் தேதி ஒரு வழக்குக்காக, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு திரும்பி வந்துள்ளார்.
அப்போது, அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஐந்து நபர்கள், சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்நிலையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மானாமதுரையைச் சேர்ந்த சங்கர் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே, போலீசார் விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து தெரிய வந்துள்ளது.