நீதி கேட்பவர்களுக்கு மதம் தடையாக இருக்கக்கூடாது எனக்கூறிய கேரள மாநில ஆளுநர் ஆரிப் கான், முத்தலாக் மீதான தடைக்கு பின் இஸ்லாமியர்களிடையே விவாகரத்து விகிதம் 96 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆரிப் கான், நீதி கேட்கும் போது முதலில் மதத்தை சொல்ல வேண்டும் என்பது விசித்திரமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளதாகவும், அனைத்து திட்டங்களும் சட்ட ஆணையம் மற்றும் அரசின் முழு கவனத்தையும் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.