ஈரோடு கிழக்கு தொகுதி ஒரு ரீவைண்ட் - வெற்றி பெற்றவர்களின் நிலவரம்

Update: 2023-02-27 01:30 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில், இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது..புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அப்போது அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிகவிற்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் தே.மு.தி.கவின் வி.சி.சந்திரகுமார்

50.83 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு 2016 நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.திருநாவுக்கரசு 43.83 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இறுதியாக 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா, 44.27 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பிறகு தற்போது இடைத்தேர்தலை சந்தித்துள்ளது,

ஈரோடு கிழக்கு தொகுதி முன்னதாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், 2014ஆம் ஆண்டு அதிக வாக்குகளை பெற்றிருந்தது, அதிமுக. அதிமுகவிற்கு பதிவான வாக்குகளின் சதவீதம் 43.08 சதவீதமாகும். இதே 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிக சதவீத வாக்குகளை திமுக பெற்றிருந்தது. திமுகவிற்கு பதிவான வாக்குகளின் சதவீதம் 55 புள்ளி 11 சதவீதமாகும். 

Tags:    

மேலும் செய்திகள்