ஈரோட்டில் சுட்ட பரோட்டோ, போட்ட டீ.வாக்குகளாக மாறுமா? - ..அடடே சொல்ல வைக்கும் அசத்தல் வித்தை
- ஈரோடு கிழக்கில் எங்கு திரும்பினாலும் தேர்தல் களைதான்....
- அமைச்சர்கள் முற்றுகையிட... முன்னாள் அமைச்சர்கள் சவால் விட... தொண்டர்கள் குத்தாட்டம் என காண்போரை அடடா சொல்ல வைக்கிறது
- உங்கள் ஓட்டு தங்கள் சின்னத்திற்கே என கோஷமிடும் தலைவர்கள் பிரசாரத்திற்கு இடையே செய்யும் சுவாரஸ்ய நிகழ்வுகளும் கவனம் பெறுகிறது.
- தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டிரம்ஸ் அடித்து ஓட்டு வேட்டையாடியது தனி ரகம்....
- வழக்கமாகவே தேர்தல் என்றால் அரசியல் கட்சியினர் காய்கறி விற்பது, இளநீர் வெட்டிக் கொடுப்பது, டீ போட்டுக்கொடுப்பது, விவசாயிகளுக்கு உதவுவது என சேவையில் புகுந்து விளையாடுவார்கள்.. இதே காட்சியை ஈரோடு கிழக்கும் பார்க்கிறது. ஆனால்... அங்கு சேவையெல்லாம் சற்று தூக்கலாக செல்கிறது..
- ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் வாக்கு சேகரித்த, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா சுட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
- ஜிலேபி போட்டுக் கொடுத்தும், முறுக்கு விற்றும் வாக்கு சேகரிப்பில் அப்ளாஸ் வாங்கினார் செஞ்சி மஸ்தான்
- சாலையோர கடையில் முட்டை தோசை போட்டு அசத்தினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு!
- அவர் சுட்ட தோசையை அவருக்கே முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் ஊட்டிவிட தொண்டர்கள் ஒரே உற்சாகம்
- அமைச்சர் சி.வி.கணேசன் டீ போட்டு வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்தார்
- பி.பி. அக்ரஹாரத்தில் பரோட்டா போட்டு அதை பொதுமக்களிடம் வழங்கி அமைச்சர் நாசர் வாக்கு சேகரித்தார்
- எங்கு திரும்பினாலும் கட்சி நிர்வாகிகள் செய்யும் சேவையெல்லாம் காண்போரை புல்லரிக்கச் செய்கிறது.
- அரசியல் கட்சிகளின் இந்த சுவாரஸ்ய பிரசாரத்தின் பின்னணியை விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், இதனால் வாக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம்தான் என்றுவிட்டார்.